மொனராகலை பிரதேசத்தில் இன்று காலை சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, 2.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தகவலின்படி, இன்று காலை 9.06 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறித்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.