ஆரம்பமாகிறது யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு ரயில் சேவை!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் சொகுசு ரயில் சேவை ஒன்றை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளாந்தம் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் அதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ரயிலின் முதல் வகுப்பிற்கான கட்டணம் 4,000 ரூபா என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply