இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணர் நேற்று மாலை கொழும்பு 7 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு -5 பகுதியைச் சேர்ந்த, 47 வயதுடைய அமல் சந்தரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
அமல் சந்தரத்ன ஃபிரான்டியர் ரிசர்ச்சின் நிறுவுனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார்.
குறித்த நிறுவனமானது,பரிமாற்ற வீதம் மற்றும் வட்டி விகித இயக்கங்கள் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளின் பகுப்பாய்வு ஆகியவற்றில் ஒரு சுயாதீனமான மற்றும் பெரும்பாலும் முரணான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.