இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இப்போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர், இது தில்ஷான் மதுஷங்கவின் அறிமுக டெஸ்ட் போட்டியாகும்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply