அல்ஜீரியாவில் காட்டுத் தீ – 25 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்ஜீரியாவின் 16 மாகாணங்களில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாகவும்,  இதனால் வனப் பகுதிகளும் விவசாய நிலங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீக்குள் சிக்கி 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தீயணைப்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அபயகரமான பகுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அல்ஜீரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply