இலங்கை கராத்தே-டூ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தியது விளையாட்டு அமைச்சு 

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இலங்கை கராத்தே டூ சம்மேளனத்தின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கராத்தே-டூ விளையாட்டுக்கான தேசிய சங்கமான இலங்கை கராத்தே-டூ சம்மேளனத்தின் பதிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் பேணுவதற்காக, தற்காலிக செயற்பாடாக ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கான இடைக்கால ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, உரிய வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply