நாட்டில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தேங்காய் உற்பத்தி குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது நாட்டிற்கு தேவைப்படுகின்ற நிலையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படப்போவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உரப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாவிட்டால் சந்தைகளில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.