10 வயது மகனை கத்தியால் தாக்கிய தந்தை!

பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 10 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8.00 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட சண்டையின் போதே குறித்த சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து அயலவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சந்தேகநபரான தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலும் சம்பவம் குறித்து கொபேகனே பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply