அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடி காங்கேயனோடையை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.