நாட்டில் போதை பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் என்பன தற்சமயம் குறைவடைந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.