தாய்லாந்திலுள்ள வெடிமருந்த கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் தெற்கு மாகாணமான நராதிவாட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெடிமருந்துக் கிடங்கில் கடந்த சனிக்கிழமையன்று குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட நெருப்பு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 121 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிவிபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் அதிகளவானோர் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள், கிடக்கின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.