நாட்டின் சிரேஷ்ட குடிமக்களுக்கு வழங்கும் வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்ற போதிலும், மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.