பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான நபர் ஜோஸ் பாலினோ கோம்ஸ் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 127 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அடுத்த வாரம் 128 ஆவது பிறந்த தினத்தை கொண்டாட இருந்த நிலையில், கோம்ஸ் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மினாஸ் ஜெரைஸில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் கோம்ஸ் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் கடந்த சனிக்கிழமை பெட்ரா பொனிடாவில் உள்ள காரிகோ டொஸ் பியால்ஹோஸில் அவரது உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
கோம்ஸின் திருமணச் சான்றிதழின்படி 1917ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4ம் திகதி பிறந்தார்.
இவர், உலகப் போர்கள் மற்றும் மூன்று தொற்று நோய்களிலிருந்து தப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.