பொலிஸ் அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பேருந்து உரிமையாளருக்கு நேர்ந்த கதி!

வெலிக்கடை பொலிஸ் பிரிவின் போக்குவரத்து பிரிவில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் தொடர்பில் வெளியான காணொளி அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

நுகேகொட மற்றும் ஹெட்டியாவத்தைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் 176ம் இலக்க தனியார் பேருந்து ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சாரதிக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பேருந்து நடத்துனராக கடமையாற்றிய குறித்த பேருந்தின் உரிமையாளரினால் பொலிஸ் அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

குறித்த காணொளியின் அடிப்படையிலேயே , சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply