லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை நாளை திருத்தப்பட உள்ளது.
அதன்படி, திருத்தியமைக்கப்பட்ட விலைகள் தொடர்பான அறிவிப்பு நாளை காலை வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலை ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 85 அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு எரிவாயுவின் விலைகள் திருத்தப்படுகின்றன என்று அவர் விளக்கமளித்தார்.