ஸ்பா என்ற பெயரில் செயற்பட்டுவந்த விபச்சார விடுதி! நால்வர் கைது!

இரத்மலானை பகுதியில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபச்சார விடுதியின் ஆண் முகாமையாளர் உட்பட அதன் சேவைகளுக்கு உதவிய மூன்று பெண்களும் என நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் வெலிமடையைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், களுத்துறை மற்றும் பொல்பிட்டிஹிகமவைச் சேர்ந்த 19, 20 மற்றும் 26 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply