உடவளவ பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.
மின்சாரத்தை குறுகிய காலத்துக்குள் உருவாக்க முடியும். ஆனால் நெற்பயிர்ச்செய்கைக்கு மூன்று மாதங்களேனும் செல்லும்.
ஆகவே சோறு உண்பவர்கள் அறிவுபூர்வமாக தீர்மானம் எடுத்து சமனல அணையில் இருந்து விவசாயத்துக்கு நீரை விடுவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மின்னுற்பத்திக்கு தேவையான நீரை சேமிப்பதற்காக சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவளவ பகுதி விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகத்தை அரசாங்கம் தடை செய்துள்ளது.
இதனால் தென்மாகாணத்தில் விவசாயத்தில் ஈடுபடும் 65 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சாரத்தை ஒருசில மணித்தியாலங்களில் உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயத்தை குறுகிய காலத்துக்குள் மேற்கொள்ள முடியாது.
நெல் பயிர்ச்செய்கைக்கு குறைந்தப்பட்சம் 3 மாதங்களேனும் செல்லும்.
நீர் மின்னுற்பத்திக்காக விவசாய நிலங்களுக்கு நீர் விடுவிப்பது தடுக்கப்பட்டுள்ளமை முறையற்றதொரு செயற்பாடாகும்.
விவசாயத்துக்கு தேவையான நீரை விடுவிக்காமல் இருப்பதால் உடவலவ பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்து பேசப்பட்டுள்ள போதும் அதற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.
மின்சாரத்தை எப்போதும் உற்பத்தி செய்யலாம் ஆனால் விவசாயத்தை விரும்பும் நேரத்தில் மேற்கொள்ள முடியாது.
ஆகவே சோறு உண்பவர்கள் அறிவார்ந்த ரீதியில் சிந்தித்து சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ பிரதேச விவசாய நிலங்களுக்கு நீரை விடுவிக்க வேண்டும் என்றார்.
சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ விவசாய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடவெலக அம்பலாந்தொட பகுதி விவசாயிகள் குறிப்பிட்டுகையில்,
வறட்சியான காலநிலை தொடர்வதால் நீர்மின்னுற்பத்திக்கு தேவையான நீரை சேமிப்பதற்கு உலவெலவ பிரதேச விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகம் முடக்கப்பட்டுள்ளது.சேதன பசளை திட்டத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டு தற்போது சற்று மீண்டெழுந்துள்ளோம்.
வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தை மேம்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்குவதை விடுத்து அரசாங்கம் புதிய தடைகளை விதிப்பது முறையற்றது.கடன் வாங்கி பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம்.
விவசாயத்துக்கு தேவையான நீரை விநியோகிக்காவிட்டால் நாங்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவோம்.எங்களால் மின்சாரம் இல்லாமல் இருளில் இருக்க முடியும். ஆகவே விவசாயத்துக்கு தேவையான நீரை விடுவிக்க வேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றனர்.
