லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம், லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நான்காம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது, அதிகரிக்கப்படமாட்டது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலையில் விலை திருத்தம் செய்யப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் விலை 2982 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply