காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த டனிஷ் அலி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சில நபர்கள் ஒன்றிணைந்து இம்மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை சிங்கப்பூர் மண்டபத்தில் மாநாடு ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மாநாடு போராட்டத்தின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தலைமையிலான ஜனநாயக தேசிய இயக்கத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.