மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர்.
பஸ் மாநில தலைநகரான டெபிக்கிற்கு வெளியே நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டு இருந்தபோது சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.