சரக்கு ரயில் – கார் மோதி விபத்து

தாய்லாந்தில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் சஷொன்சொ மாகாணம் மியோங் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை குறித்த கார் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த சரக்கு ரயில், கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply