துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி அதனை விற்பனை செய்த நபரொருவர் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த நபரொருவரின் சைக்கிளை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடியுள்ளார் .
குறித்த திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளியினைப் பார்வையிட்ட சைக்கிள் உரிமையாளர், திருடனை அடையாளம் கண்டு திருடிய காட்சியை புகைப்பட பிரதி எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை பொலிஸார் அழைத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சைக்கிளை திருடிய நபர் தான் சைக்கிளை திருடி விற்பனை செய்ததாகவும், உரியவருக்கு சைக்கிள் ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதாகவும் பொலிஸாரிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.