முருகன் கோவிலடி, புலோலி வடமேற்கில் அமைந்துள்ள அறிவகம் சன சமுக நிலையத்தின் 68 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிலைய உறுப்பினர்கள் விளையாட்டு நிகழ்வுகளையும் கலை நிகழ்வுகளையும் நடாத்த தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் 15.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று வெளிக்கழக மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டுகளான 50 கிலோமீற்றர் சைக்கிள் ஓட்டப் போட்டி, 10 கிலோமீற்றர் மரதன் ஓட்டப் போட்டிகள் என்பன மந்திகை சந்தியில் காலை 6 மணியளவில் ஆரம்பமாகும்.
மேலும் மைதான நிகழ்வுகளான கயிறு இழுத்தல், 1500 மீற்றர் ஓட்டம், 4 X 400 மீற்றர் அஞ்சல் ஓட்டம் மற்றும் பலூன் உடைத்தல் போன்ற போட்டி நிகழ்வுகள் அன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்.
போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கான பரிசில்கள் அன்றைய மைதான நிகழ்வுகளில் பின்னர் இடம்பெறும் வைபத்தில் வழங்கப்படும்.
கலைநிகழ்வுகள் 16.05.2023 புதன்கிழமை மாலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.
போட்டியில் பங்குபற்ற விரும்பும் வீரர்கள் 077 520 1721 மற்றும் 076 916 7494 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு உங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
