2-வது T20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2-வது T20 போட்டி கயானாவில் நேற்று இடம்பெற்றது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதனை தொடர்ந்து 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் நிகோலஸ் பூரன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளில் 67 ஓட்டம் சேர்த்தார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் 18.5 ஓவரில் 8 விக்கெட் இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் மேற்கிந்திய தீவுகள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply