இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் மீனவர்கள் 09 பேரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 09 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.