இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே அழைக்கப்படுகின்றது.
இந்தப் பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், குறித்த தீர்மானம் நேற்றே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, கேரளா என்ற பெயரை கேரளம் என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.