இலங்கை ஓட்டோமொபைல் சங்கத்தின் பதிவை இடைநிறுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நேற்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், அதன் செயற்பாடுகளை கவனிக்க ஏழு பேர் கொண்ட தற்காலிக குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவின் தலைவராக மகேஷ் கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளதுடன், செயலாளர் மற்றும் பொருளாளராக முறையே மேஜர் ஜெனரல் இந்துனில் ரணசிங்க மற்றும் புபுது விக்ரம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய குழு உறுப்பினர்களில் ரமேஷ் மஹமூர், நிஷான் வீரசூரிய, சம்பிக்க அமரசேகர மற்றும் சஜாத் சுஹைர் ஆகியோர் அடங்குவர்.