எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒருவேளை சுமந்திரன் வெற்றிபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடக்கூடிய ஆபத்து உள்ளதென பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குனரும் , மனித உரிமைகள் செய்ற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் நிலைமைகளை அவதானித்தால் தமிழ்த் தேசியத்தின் நிலை அது மிகவும் பரிதாப்பதிற்குரிய நிலையில் உள்ளது. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள், தமிழ் வரலாற்றை கூறுபவர்கள்,தமது கட்சிகளை பற்றி பெருமையாக பேசுபவர்கள் பல விடயங்களை அவதானத்தில் கொள்ளவில்லை.
இத் தேர்தலில் மாற்று அணி எனப் பேசுபவர்கள் அத்தனையும் மறந்த அணியாக இருக்கின்றனர்.எமது வரலாறு, எமக்கு இழைக்கபட்ட அநீதியை கூட மறந்துள்ளனர்.
1960 ஆம் ஆண்டில் கொல்வின் ஆர்.டி சில்வா கூறிய இருதேசம் ஒரு நாடு என்னும் கருத்தை தாம்தான் முதல்முதலில் கண்டுபிடித்தது போல் கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கூட்டமைப்பை உடைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதற்கு அனுமதியளித்தது யார் என்று தெரியவில்லை.
அவரும் அவரது குழுவினரும் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர் என்பது உறுதியாகத் தெரிகிறது.
சுமந்திரனை திறமையான சட்டத்தரணி, எல்லா விடயங்களையும் சிறப்பாக செய்பவர் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர் உள்ளிட்டவர்கள் புதிய அரசியல் யாப்பிற்கு நாம் உதவி செய்யவேண்டுமென கூறி தமிழ் மக்களை தெருவில் விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.