அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

நாட்டில் நேற்றைய தினத்தை விட இன்று (10) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கி –  நேற்றைய தினம் (09) 312. 39 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 311. 42 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.76 ரூபாவிலிருந்து 326.74 ரூபாவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் (09) 310.77 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 309.78 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 325ரூபாவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

சம்பத் வங்கி – நேற்றைய தினம் (09) 315 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 314 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply