நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா!

ரஷ்யா நிலவுக்கு தனது விண்கலத்தை 47 ஆண்டுகளுக்குப் பிறகு அனுப்பியுள்ளது.

லூனா 25 என்ற விண்கலத்தை ஐரோப்பிய நாடுகளின் உதவியின்றி ரஷ்யா அனுப்பியுள்ளது.

ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.

800 கிலோ எடைகொண்ட  விண்கலம் அடுத்த 5 நாட்களில் சந்திரனின் சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த விண்கலம், வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென்துருவப் பகுதியில் 3 முதல் 7 நாட்களுக்குள் தரையிறங்கும் என ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சந்திரயான்- விண்கலம் நிலவின் தெற்குப் பகுதியில் தரையிறங்க உள்ள நிலையில், ரஷ்யாவின் லுனா-25 விண்கலமும் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply