வட மாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவர் சாதனை!

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் பங்குபற்றிய வவுனியா நெளுக்குளம் பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆண், பெண் இருபாலருக்குமான பளுதூக்கும் போட்டியில் நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்கள் 17 வயது ஆண்கள் பிரிவில் ஜெ. ஜதுர்சன் 61 கிலோகிராம் எடை பிரிவில் 112 கிலோகிராம் பளு தூக்கி தங்க பதக்கமும், கி. சுபிஸ்கரன் 73 கிலோகிராம் எடை பிரிவில் 126 கிலோகிராம் பளு தூக்கி வெள்ளி பதக்கமும், 20 வயது ஆண்கள் பிரிவில் அ.கோகுலன் 67 கிலோகிராம் எடை பிரிவில் 140 கிலோகிராம் பளு தூக்கி தங்கமும், 17 வயது பெண்கள் பிரிவில் ச. பிரியங்கா 81 கிலோகிராம் எடை பிரிவில் 66 கிலோகிராம் பளு தூக்கி வெண்கல பதக்கமும் , யோ. சாருஜன், கா . பிரியதர்சன், அ. பிரகீஷ், க. கலா முறையே 4 ஆம், 5ஆம் இடங்களையும் பெற்று பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply