வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறைந்த வெப்ப நிலையாக 12.6 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் நிலவியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகளவான மழைவீழ்ச்சி நேற்றைய தினம் மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் குறித்த மாவட்டத்தில் 63.7 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.