திடீரென உச்சம் தொட்ட வாழைப்பழம் மற்றும் எலுமிச்சையின் விலை!

இலங்கை சந்தையில் எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, விளைச்சல் குறைவடைந்தமையினால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம் ஒரு கிலோகிராம் புளி வாழைப்பழம் 130 ரூபாவுக்கும், ஏனைய வகை வாழைப்பழங்கள் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply