தேசிய பொதியிடல் மத்திய நிலையம் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்குள் நிறுவப்பட்டுள்ளது.
உள்ளூர் பொதியிடல் உற்பத்தித்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பொதியிடல் உற்பத்தி மூலம் ஏற்றுமதி பொருட்களுக்கான பெறுமதி சேர்த்தல் மற்றும் அறுவடைக்குப் பின்னரான சேதங்களைக் குறைப்பதற்கு இந்த பொதியிடல் மத்திய நிலையம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.