யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தொழில் தேடுவோருக்கான அரியவாய்ப்பாக இந்த தொழிற் சந்தை அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சந்தை எதிர்வரும் 19 ஆம் திகதி, காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
அதன் போது தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.
மேலும் கணினி மற்றும் தாதியர் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் தொடர்பான தகவல்களும் வழங்கப்படவுள்ளன.
குறித்த தொழிற் சந்தைக்கான அனுமதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.