காலி சிறைக் கைதிகள் உயிரிழப்பு – வெளியானது காரணம்!

மெனிங்கோகோகஸ் (Menigococcus) பக்டீரியா தொற்று காரணமாகவே காலி சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி சிறைச்சாலையில் இனங்காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று ஆய்வுகளை ஆரம்பித்திருந்த நிலையிலேயே காரணம் வெளியாகியுள்ளது.
குறித்த பக்டீரியா தொற்றுக்குள்ளான மேலும் 3 கைதிகள் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், இந்த தொற்று காரணமாக இதுவரை 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply