இலங்கை போக்குவரத்து சபையின் தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
60,ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய வேளையில் நேற்றையதினம் மெதிரிகிரியவில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பேருந்து பயண சீட்டு வழங்காததால் பேருந்து நடத்துனரிடம் விசாரணையை கைவிட அவரிடம் இருந்து 60,ஆயிரம் ரூபா இலஞ்சமாக கேட்டுள்ளார்.
அத்துடன் டிப்போ அதிகாரி ரூ.100 கோடி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட டிப்போ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக பொலன்னறுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.