யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நாளை 1 ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை கைத்தொழில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.
குறித்த கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்தார்.