சஜித்துடன் கூட்டணி சேரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 9 பேர் சஜித் பிரேமதாசவுடன் இணைய தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் அமைக்கப்பட உள்ள புதிய அரசியல் கூட்டணியில் சுதந்திர மக்கள் காங்கிரஸ் இணையாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அதில் சுதந்திர மக்கள் காங்கிரஸை சேர்ந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புதிய அரசியல் கூட்டணியின் யாப்பு கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply