இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் ஆலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் ஆலயத்திலும் காங்கேசன்துறை மாவட்ட கந்தசாமி ஆலயத்திலும் யாழ் நகர் ஜும்மா பள்ளிவாசலிலும் பிரார்த்தனைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பிரார்த்தனைகளில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.