வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தெ.மேனன் குழு இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.