நான்கு நாட்களில் ரூ.531 கோடி வசூல் – ஜவான் வசூல் சாதனை!

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் வசூலில் சாதனை புரிந்திருந்த நிலையில் செப்டம்பர் 7ம் தேதி வெளியான ‘ஜவான்’ படமும் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதோடு ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானதுடன் ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் அட்லி.

 

 

 

 

 

 

கடந்த நான்கு நாட்களில் ‘ஜவான்’ திரைப்படம், உலகம் முழுவதும் 531 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சாதனையை மிக வேகமாக அடைந்த ஹிந்திப் படம் என்ற பெருமையையும் ‘ஜவான்’ திரைப்படம் பெற்றுள்ளது. மேலும், ஒரு வருடத்தில் இரண்டு 500கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார் ஷாருக்கான்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply