தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் Beth Van Schaack ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்ததாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
அத்துடன் தற்போது வெளியாகியுள்ள சனல் 4 ஆவணப்படம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.