ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகள் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை தமது வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி ஜனாதிபதியின் பதில் செயலாளரினால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இவ்வாறான பெயர் பலகைகளை காட்சிப்படுத்தும் வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையவை அல்ல என்றும், பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.