புகையிரதத்துடன் லொறி ஒன்று மோதியதில் ஒருவர் பலி!

மீட்டியாகொட, கஹாவ, கொடகம புகையிரத கடவையில் இன்று காலை  சிறிய ரக லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த  விபத்தில் லொறியில் பயணித்த 40 வயதுடைய பத்தேகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்திலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply