எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதைப் போன்று மாதாந்தம் பேருந்து கட்டண திருத்தமும் மேற்கொள்ளப்படும் வகையில் தேசிய பேருந்து கட்டண திருத்தக் கொள்கையை திருத்துமாறு கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.