ஒருகொடவத்தையில் உள்ள தரவரிசை கொள்கலன் முனையத்தில் ஒரு கொள்கலனுக்குள் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய தொகையான போதைப்பொருள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொள்கலனுக்குள் 35 கிலோகிராம் ‘ஹஷிஸ்’ எனும் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து இலங்கை சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.