சிறுமி படுகொலைக்கு காரணமான மூவர் கைது!

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி வழங்கிய மூவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் காயமடைந்தார்.

இந்தநிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் 36 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இறக்காமம் மற்றும் ராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply