ஹோர்டன் சமவெளியில் உள்ள வேர்ல்ட்ஸ் எண்ட் நுழைவாயிலுக்கு செல்லும் பிரதான வீதிகளில் ஒன்று மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, அம்பேவெலயிலிருந்து ரெண்டபொல ஊடாகவேர்ல்ட்ஸ் எண்ட் வரையான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீதியின் 3 கிலோமீற்றர் அஞ்சல் பகுதிக்கு அருகில் மண் மேடுகள் வீதியில் விழுந்துள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.