எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாணவர்களுக்கு மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் உள்ள சிரமங்கள் ஏதேனும் இருந்தால், பரீட்சார்த்திகளின் பெற்றோர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு முன்னர் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கோரியுள்ளது.
இந்த பிரச்சினைகளை மாத்தறையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0412 234 134 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.